ஈரோடு மாவட்டம் மூலப்பாளையம் பகுதியில் விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து பெண்கள் மஞ்சள் நீராடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜகணபதி விநாயகர் கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உற்சாக நடனமாடியும், மஞ்சள் நீராடியும் கொண்டாடினர்.
மேலும், மஞ்சள் நீராட்டத்திற்கு வராத பெண்களின் வீடுகளுக்குச் சென்று மஞ்சள் நீரூற்றி மகிழ்ந்தனர்.