தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி சுவாமி ஊர்வலம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும், அழகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வழிநெடுகிலும் நின்றிருந்த ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.