ரயில் பயணிகளுக்கு உடனடி மருத்துவ உதவி வழங்கும் “மெடிக்கல் எக்ஸ்பிரஸ்” என்ற கருவியைக் கண்டுபிடித்து விருதுநகர் மாவட்ட பள்ளி மாணவிகள் அசத்தியுள்ளனர்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த திவ்யதர்ஷனா, சுபாஷினி ஆகிய இருவர் இந்த கருவியைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கருவியானது மொபைல் செயலி மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு எம்மாதிரியான மருந்துகள் தேவைப்படுகிறதோ, அதை உரிய நேரத்தில் வழங்க இது உதவி செய்கிறது.