தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் சித்திரை விசு திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள சிவசைலநாதர் கோயிலில் கடந்த 5ஆம் தேதி சித்திரை விசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தை முன்னிட்டு சிவசைலநாதர், பரமகல்யாணி அம்பாள் தனித்தனி தேரில் எழுந்தருளினார்.
சுவாமி தேரை ஆண்களும், அம்பாள் தேரை பெண்களும் வடம் பிடித்து இழுத்தனர். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.