மீன்பிடி தடை காலம் தொடங்கவுள்ளதை ஒட்டி புதுச்சேரி மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவு முதல் 61 நாட்களுக்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தேங்காய் திட்டு துறைமுகத்தில் படகுகளை நிறுத்தி வைத்துள்ள மீனவர்கள், வலைகளை புதுப்பித்தல், உபகரணங்களை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.