அரியலூரில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
தென்னகத்தின் திருப்பதி என்று அழைக்கப்படும் கல்லங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாக விளங்குகிறது.
இந்த கோயில் பெருந்திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்த பெருமாள், இன்று திருத்தேரில் எழுந்தருளினார்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா என்ற முழக்கத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.