சீனாவில் நுழைய பிரிட்டன் பெண் எம்.பி வேரா ஹோப்ஹவுஸ் என்பவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் உள்ள லிபரல் டெமாக்ரடிக் கட்சி எம்.பி. வேரா ஹோப்ஹவுஸ் என்பவரது மகன் ஹாங்காங்கில் வசித்து வருகிறார்.
அவர் தனது மகனைக் காண்பதற்காக ஹங்காங்குக்கு சென்ற நிலையில், சீனாவின் மனித உரிமைகள் தொடர்பான கருத்துகளை வெளிப்படுத்தியதற்காக விமான நிலையத்திலேயே வேரா ஹோப்ஹவுஸ் தடுத்து நிறுத்தப்பட்டார். அதேசமயம் அவரது கணவருக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை.