விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி பாரம்பரிய நடனங்களுடன் வெண்குடை திருவிழா கொண்டாடப்பட்டது.
சீனிவாசன் புதுத் தெருவிலிருந்து அலங்கரிக்கப்பட்ட அய்யனார் சுவாமி, பூச்சப்பரத்தில் உலா வந்தார். அப்போது, காலில் சலங்கை அணிந்த நபர் ஒரு வெண் குடையுடன் நடனமாட அதனை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர்.
இதைத் தொடர்ந்து பாரம்பரிய நடனமான ஒயிலாட்டம், மயிலாட்டம் ஆகியவற்றுடன் வீதியுலா நடைபெற்றது. இதேபோல, பழைய பாளையத்தைச் சேர்ந்த சித்திரைத் திருவிழா குழுவினர் சார்பிலும் மாயூரநாத சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
விழாவைக் காணத் திரளான பக்தர்கள் குவிந்ததால் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.