புதுச்சேரியில் இருந்து செஞ்சிக்கு மதுபாட்டில்களை சேலைக்குள் ஒளித்து வைத்துக் கடத்திய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
செஞ்சி பேருந்து நிலையத்தில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த 2 பெண்களைப் பிடித்து சோதனை மேற்கொண்ட போலீசார், அவர்கள் மதுபாட்டில்கள் வைத்திருப்பதை அறிந்தனர்.
இதற்காக பிரத்யேக புடவை தயாரித்து மதுபாட்டில்களை புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து 2 பெண்களையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 230 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.