திருவண்ணாமலையில் குடியிருப்பு வாசியை மின்வாரிய ஊழியர்கள் மிரட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.
வடமாதிமங்கலம் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் மின்வாரியத்தின் தொலைப்பேசி எண்ணில் புகார் அளித்துள்ளார்.
புகார் அளித்தவரின் வீட்டிற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் இருவர், மதுபோதையில் அவரை மிரட்டினர். இந்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், மிரட்டலில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.