நடிகர் சூர்யாவின் ’ரெட்ரோ’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வரும் 18ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யாவின் 44ஆவது திரைப்படமான ‘ரெட்ரோ’ திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தொழிலாளர் தினமான மே 1ஆம் தேதி ‘ரெட்ரோ’ திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், டிரெய்லர் வரும் 18ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.