கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அமைச்சர் பங்கேற்க விருந்த அரசு நிகழ்ச்சியில், ஓட்டுநர்களும், பயணிகளும் வெயிலில் நிற்க வைக்கப்பட்ட அவலம் அரங்கேறியது.
விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து மகளிர் கட்டணமில்லா பேருந்து மற்றும் புதிய பேருந்துகளைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
காலை 10.30 மணிக்கு நடைபெறவிருந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் கணேசன் மாலை 3.30 மணிக்கு வருகை தந்தார்.
அதுவரை, ஓட்டுநர்கள், நடத்துனர்கள், பயணிகள் ஆகியோரை அதிகாரிகள் வெயிலில் காத்திருக்க வைத்ததால் அவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.