ஸ்டாலினின் அலங்கோல ஆட்சியில், பள்ளிச் சிறார்கள் கைகளிலும் பயங்கர ஆயுதங்கள் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
Oct 24, 2025, 03:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஸ்டாலினின் அலங்கோல ஆட்சியில், பள்ளிச் சிறார்கள் கைகளிலும் பயங்கர ஆயுதங்கள் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Apr 15, 2025, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பள்ளிச் சிறார்கள் கைகளிலும் பயங்கர ஆயுதங்கள் புழங்குமளவிற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பது பெரும் ஆபத்தானது எனப் பாஜக மாநிலத் தலைவர்  நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பள்ளி வகுப்பறைக்குள்ளேயே எட்டாம் வகுப்பு மாணவனை சக மாணவன் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தடுக்க வந்த ஆசியரையும் அம்மாணவன் தாக்கியுள்ளதும் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. காயமடைந்த மாணவனும், ஆசிரியரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமொரு கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் மற்றும் சாதிய ரீதியான தாக்குதல் ஆகியவை வரிசை கட்டிக் கொண்டிருக்கும் ஸ்டாலினின் அலங்கோல ஆட்சியில், பள்ளிச் சிறார்கள் கைகளிலும் பயங்கர ஆயுதங்கள் புழங்குமளவிற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பது பெரும் ஆபத்தானது என நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

அதுவும், “பென்சில் கேட்ட தகராறில் தாக்குதல் நடந்துள்ளது” எனக் கூறுகிறார் நெல்லை உதவி காவல் ஆணையர். ஆனால், பென்சிலுக்காக பள்ளிக்குள் அரிவாளை மறைத்து எடுத்துச் சென்று உடன் படிக்கும் மாணவனைத் தாக்குமளவிற்கு நமது பிள்ளைகளின் மனதில் வன்முறை வேர் படர்ந்துள்ளதா என்ற சந்தேகம் தமிழக மக்கள் மத்தியில் வலுக்கிறது என நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்த சம்பவத்தில் உண்மை நிலவரம் என்ன என்பதை முறையாக ஆராய்ந்து அதற்கு தக்க நடவடிக்கைகள் எடுப்பதோடு, இனியும் பள்ளிக் குழந்தைகள் மத்தியில் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நிகழாமலிருக்க தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும் முதல்வரை நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Tags: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டுஸ்டாலினின் அலங்கோல ஆட்சிUnder Stalin's chaotic regimeeven school children had deadly weapons in their hands: Nayinar Nagendran alleges
ShareTweetSendShare
Previous Post

திமுகவின் B -Team ஆக மாறிய தவெக?

Next Post

ஒரு கிராமமே வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமா? – நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் கிராம மக்கள் அதிர்ச்சி!

Related News

கிருஷ்ணகிரி : தொடர் மின்வெட்டைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் , பொதுமக்கள் சாலை மறியல்!

விருதுநகர் : போதை இளைஞர்களை கைதுசெய்ய வலியுறுத்திப் பொதுமக்கள் சாலை மறியல்!

திருப்பத்தூர் : ஓடையை கடந்து சடலத்தை எடுத்து சென்ற உறவினர்கள்!

திருச்சியில் நடைபெற்ற ரயில் விபத்து மீட்பு ஒத்திகை – 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி அடுத்த வாரம் தொடங்கும் – தேர்தல் ஆணையம் தகவல்!

கொடைக்கானல் : அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்!

Load More

அண்மைச் செய்திகள்

”ஆண்மகன் என்றால் களத்திற்கு வா”- அசிம் முனீருக்கு TTP சவால்!

பீகாரில் இதுவரை இல்லாத அளவிற்கு NDA கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும் : பிரதமர் மோடி நம்பிக்கை!

நடிகர் மம்முட்டியின் ‘களம் காவல்’ நவ. 27ல் வெளியாகிறது!

பாக்., பலூச் படை இடையே நடந்த மோதல் – பலர் உயிரிழப்பு!

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் தலைமைக்கு உயர்நிலைக் குழு ஆதரவு!

சுப்மன் கில்லுக்கு கை கொடுத்த பாகிஸ்தான் ரசிகர் – சர்ச்சை வீடியோ!

தமிழ் ஜெனம் செய்தி எதிரொலி – புதிய மின்கம்பங்கள் நடப்பட்டு வழங்கப்பட்ட மின் இணைப்பு!

பத்மாவதி ரயிலில் திடீர் ஷார்ட் சர்க்யூட் – பயணிகள் அதிர்ச்சி!

அமெரிக்காவின் தேசியக் கடன் ரூ.3,339 லட்சம் கோடியாக அதிகரிப்பு – அமெரிக்கர்களின் தலையில் ரூ.1 கோடி ரூபாய் கடன்!

பணி நீக்கப்பட்ட மெட்டா ஊழியர்களுக்கு வாய்ப்பளித்த சுதர்ஷன் காமத்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies