மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டப்பேரவையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மானியக்கோரிக்கை விவாதம் விரைவில் நடைபெற உள்ள நிலையில், 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு பார்வை மாற்றுத்திறனாளி கூட்டமைப்பினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்ட நிலையில், பராமரிப்பு உதவித்தொகையை 5 ஆயிரமாக உயர்த்த வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிங்காரவேலன், கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சரைச் சந்திக்க முயற்சித்தும் அனுமதி கிடைக்கவில்லை எனக் கூறினார்.
மேலும், 3 அம்ச கோரிக்கைகளுக்கு முதலமைச்சர் செவி சாய்ப்பார் என நம்பிக்கை தெரிவித்தார்.