கர்நாடக மாநிலம், பெங்களூரு நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்ற தண்ணீர் லாரி 3 முறை பல்டி அடித்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான விபத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெங்களூரு பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த தண்ணீர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பான காட்சிகள் முன்னால் சென்று கொண்டிருந்த காரின் பின்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி உள்ளது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.