10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவடைந்த நிலையில், மாணவர்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவிகள் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.
மேலும் சக மாணவிகளைக் கட்டித் தழுவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தங்களுக்குப் பாடம் எடுத்த ஆசிரியர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று வீடு திரும்பினர்.
10-ஆம் வகுப்பின் கடைசி நாள் என்பதால் ஒருசில மாணவர்கள் நண்பர்களைப் பிரிந்து உணர்ச்சி வயப்பட்ட வீடு திரும்பினர்.