ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் - சிறப்பு தொகுப்பு!
Sep 20, 2026, 07:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 6, 2025, 09:57 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அருட்பெரும் சோதியான வள்ளலார் அவதார தினம் இன்று. ‘உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே’ என்ற காப்பிய மொழிக்கேற்ப, தன் வாழ்நாள் முழுவதும் மக்களின் பசிப்பிணி போக்குவதற்கே செலவழித்த வள்ளலார் பற்றிய ஒரு செய்தித்தொகுப்பு.

உலகிலேயே ஒரு அதிசயமான புண்ணிய பூமி தமிழ்நாடு ஆகும். எந்த காலத்துக்கு என்ன தேவையோ அதை மக்களுக்கு வழங்க இறைவனே ஒரு ஞானியை அனுப்பி வைப்பான். அந்த வரிசையில் வந்தவர் தான் வள்ளலார் என்று அனைவராலும் போற்றப்படும் இராமலிங்க சுவாமிகள்.

1823ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி, கடலூர் அருகே மருதூர் கிராமத்தில் வள்ளலார் அவதரித்தார். தந்தை ராமையா பிள்ளை-சின்னம்மையார் தம்பதியருக்கு திருமகனாக பிறந்த அவரது பெற்றோர் இராமலிங்கம் என்று பெயர் வைத்தனர்.

கருவிலேயே திருவுடைய இராமலிங்கத்துக்கு, சிறுவயதிலேயே, திருவொற்றியூர் வடிவுடையம்மன் நேரில் வந்து உணவூட்டிய அதிசயம் நடந்தது. தனது 9-வது வயதில் பல தெய்வப் பனுவல்களை மனப்பாடமாகப் பாடும் ஆற்றல் பெற்ற வள்ளலார், தனது 12 வயதிலேயே இறைப்பணியில் ஈடுபடத் தொடங்கினார்.

அன்றைய காலக் கட்டத்தில் , சென்னையில் பெரும்புலவராக விளங்கிய தொழுவூர் வேலாயுதனார் வள்ளலாரின் மாணவரானார் என்பதே வள்ளலாரின் பெருமையைச் சொல்லும். 1850ஆம் ஆண்டு, தனது உறவினர்களின் வற்புறுத்தலால் தனது சகோதரி மகளான தனம் அம்மாளைத் திருமணம் செய்துகொண்டார் வள்ளலார்.

1858 ஆம் ஆண்டு, வள்ளலார், இல்லற வாழ்வைத் துறந்து, முழுமையான இறைவாழ்வை மேற்கொண்டார். தலயாத்திரையாக கிளம்பியவர் , வடலூர் அருகே உள்ள கருங்குழி கிராமத்தில் மணியக்காரர் இல்லத்தில் வந்து தங்கினார். 1867ஆம் ஆண்டு வரை வள்ளலார் கருங்குழி கிராமத்திலேயே வாழ்ந்து வந்தார்.

1867-ம் ஆண்டு மே மாதம் 23-ம் நாள் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையைத் தொடங்கினார். அன்று வள்ளலார் திருக்கரத்தால் ஏற்றப்பட்ட அடுப்பு இன்றுவரை அணையாமல் தொடர்ந்து எரிந்து வருகிறது

வடலூர் வள்ளலார் தெய்வநிலையம் என்பது அவர் உருவாக்கிய ஞானசபை, தருமச்சாலை, ஜோதியாய் மறைந்த சித்தி வளாகம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
வள்ளலார் தான் கண்ட சுத்த சன்மார்க்கத்துக்குத் தனிப்பெயர், தனிக்கொள்கை, தனிக்கொடி, தனிஇடம் ஏற்படுத்தி அவற்றுக்கு திருமந்திரம், சபை, சாலை, வழிபாட்டு விதிகள், கட்டளைகள், நூல்கள், உரைகள், பாடல்கள் முதலியவற்றை வழங்கியுள்ளார்.

வள்ளலார் வடலூரில் ஏற்படுத்திய சத்திய ஞானசபையில் தம் கைப்பட ஒரு திருவிளக்கை ஏற்றி அதற்கு முன்பாக ஐந்தடி உயரமுள்ள ஒரு கண்ணாடியையும் அமைத்தார். கண்ணாடிக்கு முன்னால் கருப்பு,நீலம், பச்சை, சிவப்பு,மஞ்சள்,வெள்ளை,புகை நிறம் ஆகிய 7 திரைகள் அமைத்தார். தைப்பூசத் திருவிழாவின் போது 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது. சத்திய ஞானசபையில் வள்ளலார் ஏற்படுத்திய வழிமுறைகளின் படியே ஜோதிவழிபாடு இன்றும் நடைபெறுகிறது.

இம்மண்ணுலகில் 50 ஆண்டுகள் 3 மாதங்கள் 25 நாள்கள் வாழ்ந்த வள்ளலார், 1874 -ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி ஜோதியில் கலந்தார். உயிர்களைப் பசியிலிருந்து காப்பதும், பிணியிலிருந்து விடுவிப்பதும், இயலாதோரை பேணிக்காப்பதும் இறைத்தொண்டு என்று ஆன்மிக வாழ்வுக்குப் புது இலக்கணம் படைத்த வள்ளலாரை போற்றுவோம்.

Tags: Marudhursothi Vallalar.Ramalinga SwamiTamil NaduvallalarVadalur
Share
Tweet
SendShare
Previous Post

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

Next Post

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies