இந்தியாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகமாகப் பொழியும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை பொதுவாக ஜூன் 1ம் தேதி தொடங்கும். அதன்படி, ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் தென்மேற்கு பருவமழை இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் இயல்பைவிட அதிகம் பதிவாகும் என்றும், தமிழகத்தில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பிற்கு குறைவாக பதிவாகக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.