பரஸ்பர வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டுக்கான பிரதான தாதுவளம் மற்றும் காந்த ஏற்றுமதியைச் சீனா நிறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் கனிமங்களைச் சீனா ஏற்றுமதி செய்ய மறுப்பதால், அமெரிக்காவின் பாதுகாப்புத் துறைக்கான உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது.
பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில், சீனாவும் அமெரிக்காவும் ஒருவர் மீது ஒருவர் கடும் வரிச்சுமையை விதிப்பது குறிப்பிடத்தக்கது.