கால்பந்து வெற்றிக் கோப்பையை அமெரிக்கத் துணை அதிபர் டேவிட் வென்சி கையில் தூக்கிய போது உடைந்து விழுந்தது.
அமெரிக்காவில் தேசிய அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் ஓஹியோ மாகாண கால்பந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற ஓஹியோ அணி வெற்றி கோப்பையுடன் வெள்ளை மாளிகைக்குச் சென்றது.
அப்போது துணை அதிபர் டேவிட் வென்சி, கோப்பையைக் கையில் தூக்கிய போது உடைந்து விழுந்தது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.