சந்தானம் மற்றும் சூரியின் படங்கள் ஒரே நாளில் ரிலீசாவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. இந்த படத்தினை நடிகர் ஆர்யா தயாரித்துள்ளார். இப்படம் மே மாதம் 16-ம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது.
அதனைத் தொடர்ந்து, பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நடித்துள்ள ‘மாமன்’ திரைப்படமும் மே 16-ந் தேதி வெளியாகிறது. இந்த இரண்டு படங்களும் திரையரங்குகளில் ஒரே தேதியில் வெளியாகவுள்ளதால் மிகப்பெரிய போட்டி ஏற்பட்டுள்ளது.