உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் தற்போது வரை எவ்வித சமரசமும் இன்றி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இரு நாடுகளும் பதிலுக்குப் பதில் தாக்குதல்களையும் மேற்கொண்டுள்ளனர். உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றார்.
இருப்பினும் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால் வீடுகள், உணவு என அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர்.