கொடைக்கானலில் உள்ள ஏரிச்சாலை பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், முறையான கழிப்பிட வசதியின்றி கழிப்பறைகளைத் தேடி அலையும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்குக் கோடை விடுமுறையை ஒட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
அங்குள்ள ஏரிச்சாலையை சுற்று பல சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பத்துடன், அப்பகுதியில் குதிரை சவாரி மேற்கொண்டும், நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்வது வாடிக்கை.
இந்நிலையில், ஏரிச்சாலையில் 6 கிலோ மீட்டர் தூரம் வரை முறையான கழிப்பிட வசதி இல்லாததால், தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்குக் கழிப்பறைகளைத் தேடி அலையும் அவல நிலைக்குச் சுற்றுலாப் பயணிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
அதனால் அப்பகுதியில் பழுதடைந்து கிடக்கும் கழிப்பறைகளை விரைவில் சரி செய்யவும், புதிதாகக் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகளைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கவும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.