டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கு - வாபஸ் பெற்றார் இபிஎஸ்!
Sep 17, 2025, 09:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கு – வாபஸ் பெற்றார் இபிஎஸ்!

Web Desk by Web Desk
Apr 17, 2025, 07:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு எதிராக இபிஎஸ் தாக்கல் செய்த மனு திரும்ப பெறப்பட்டதையடுத்து வழக்கை முடித்து வைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவிலிருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு நீக்கப்பட்ட டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார்.

அப்போது, அதிமுகவின் கொடியில் உள்ளது போலவே கருப்பு, வெள்ளை, சிவப்பு ஆகிய நிறங்களையும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதவின் புகைப்படத்தையும் தனது கட்சிக் கொடியில் பயன்படுத்தினார்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த 2019ம் ஆண்டு சென்னை 3வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

அதில், அதிமுக கொடியில் உள்ள நிறங்கள் மற்றும் ஜெயலலிதாவின் படம் உள்ள கொடியை, அமமுக பயன்படுத்த தடை விதிக்க வேண்டுமெனவும், 25 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கானது, உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஆர்.கே.பி. தமிழரசி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் வழக்கை திரும்ப பெறுவதாகவும், இதனை நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Tags: AMMK General Secretary TTV Dhinakaranaiadmk flag caseepsTTV DhinakaranO. PanneerselvamChennai Civil Court
ShareTweetSendShare
Previous Post

வக்ஃபு வாரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Next Post

ஆரணி அருகே தர்மராஜா பாஞ்சாலியம்மன் அம்மன் கோயில் அக்னி வசந்த விழா!

Related News

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

பாக். அதிபர் சர்தாரியின் சீன சுற்றுப்பயணம் – எதிர்கால இந்தியா – சீனா உறவை மாற்றியமைக்குமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

காதல் வலை விரித்து கோடிகளில் மோசடி – மீண்டும் கைதாகியுள்ள நிஜ உலக ‘TINDER SWINDLER’!

Load More

அண்மைச் செய்திகள்

மழைநீர் வடிகால்களில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு – அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்!

உரிய விலை கிடைக்காமல் உதிர்ந்து விழும் பூக்கள் – விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்குமா தமிழக அரசு?

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

திராவிட மாடல் கும்பல் அரியணையில் தொடரவே தகுதியற்றது – நயினார் நாகேந்திரன்

செங்கல்பட்டு அருகே பாமக பிரமுகர் அடித்துக் கொலை!

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – 2வது சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி!

பிசிசிஐ ஸ்பான்சரான அப்போலோ டயர்ஸ் நிறுவனம்!

தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

4 நாட்களில் ரூ.91.45 கோடியை வசூலித்த மிராய் படம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies