ஆரணி அருகே நடைபெற்ற அக்னி வசந்த விழாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் உள்ள தர்மராஜா பாஞ்சாலியம்மன் அம்மன் கோயில் அக்னி வசந்த விழா விமரிசையாக நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக பூக்குழி இறங்கும் வைபவம் நேற்று நடைபெற்றது.’
இதில், காப்பு கட்டி விரதமிருந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தர்மராஜா – பாஞ்சாலி அம்மனை மனுமுருகி சாமி தரிசனம் செய்தனர்.