பெங்களூருவில் மெட்ரோ பணிக்காக லாரியில் கொண்டு சென்ற சிமென்ட் ஸ்லாப், ஆட்டோ மீது விழுந்தில் ஓட்டுநர் உயிரிழந்தார்.
லாரி வளைவில் திரும்பும்போது சுவர் விழுந்த நிலையில், ஆட்டோவில் பயணித்த நபர் கீழே குதித்து தப்பியோடினார். ஆனால் ஓட்டுநரால் இறங்க முடியாத நிலையில் சுவர் விழுந்து ஆட்டோ நசுங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக மெட்ரோ அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய போலீசார், தலைமறைவாக உள்ள லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.