உத்தரகாண்ட் மாநிலம், ஜனாசு பகுதியில் நடைபெற்று வரும் நாட்டின் மிக நீளமான சுரங்கப்பாதை பணிகளை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் பார்வையிட்டார்.
உத்தரகண்டில் ரிஷிகேஷ் – கா்ணபிரயாக் இடையே 125 கிலோ மீட்டர் தொலைவிலான ரயில் பாதை இணைப்பு திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தேவ்பிரயாக் – ஜனாசு பகுதிகளுக்கு இடையே 14.57 கிலோ மீட்டர் தொலைவில் நடைபெற்று வரும் சுரங்கப் பணிகளை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கா் சிங் தாமி நேரில் பார்வையிட்டனர்.
அப்போது பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்தியாவில் ரயில் சேவை தொடங்கப்பட்ட நாளில் சுரங்கப்பணிகளை பார்வையிடுவதில் மகிழ்ச்சி என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சுரங்கப் பணிகளுக்காக இமயமலையில் துளையிடும் இயந்திரத்தை இயக்குவது பெரிய சவாலாக இருந்தது எனவும் தெரிவித்தார்.