ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 27 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
குஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக நாகேந்திரன், பொன்னை பாலு உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், 13 பேர் வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் குற்றம்சாட்டப்பட்ட 27 பேரின் தரப்புக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து அவர்களின் நீதிமன்ற காவலை வரும் 28-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.