கொல்கத்தாவில் இருந்து கால்பந்து விளையாடியபடியே டெல்லி செல்லும் ஜப்பானியக் கால்பந்து வீரர் வாரணாசியை வந்தடைந்தார்.
ஜப்பானிய கால்பந்து வீரர் நோசோமு ஹகிஹாரா என்பவர் கடந்த மார்ச் 3 ம் தேதி புதிய சாதனை முயற்சியை மேற்கொண்டார்.
இவர் கொல்கத்தாவிலிருந்து டெல்லி வரை கால்பந்து விளையாடியபடியே செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சுமார் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய சூழல் உள்ள நிலையில் நோசோமு ஹகிஹாரா உத்தரப்பிரதேசம் வாரணாசி பகுதியை வந்தடைந்தார்.