மத்திய ஆயுதக் காவல் படை தினத்தை ஒட்டி மத்தியப் பிரதேச மாநிலம், நீமுச் பகுதியில் பயிற்சி நாய்களின் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
86வது மத்திய ஆயுதக் காவல் படை தினத்தை ஒட்டி நீமுச் மைதானத்தில் பல்வேறு சாகசங்களை சிஆர்பிஎஃப் வீரர்கள் நிகழ்த்திக் காட்டினர்.
ஆயுதக் காவல் படையின் கே-9 பிரிவினர் தங்களது பயிற்சி நாய்களைக் கொண்டு சாகசங்களை நிகழ்த்தினர்.
அதில் தீவிரவாதிகளைக் கண்டுபிடிப்பது, வெடி பொருள் உள்ள பைகளைக் கண்டறிவது உள்ளிட்டவற்றை நாய்கள் செய்து காண்பித்தது காண்போரைக் கவர்ந்தது.
இந்நிகழ்வில் மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.