கைலாஷ், மான்சரோவர் புனிய யாத்திரையை மீண்டும் தொடங்க இந்தியா – சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
எல்லை பிரச்சனை தொடர்பாக 4 ஆண்டுகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கைலாஷ், மான்சரோவர் புனிய யாத்திரையை நடப்பாண்டில் தொடங்க இரு நாடுகளும் முடிவு செய்தன.
அதற்கான பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில் விமானச் சேவைகள் உள்ளிட்ட யாத்திரை கட்டமைப்பு உருவாக்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளன.
இதற்கிடையே விரைவில் சுமுக தீர்வு காணப்படும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.