இந்திய கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளர்கள் 2 பேரை நீக்கி பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.
2024-25 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதன் எதிரொலியாக இந்திய அணியின் துணை பயிற்சியாளர்கள் அபிஷேக் நாயர், பீல்டிங் பயிற்சியாளர் திலீப் ஆகியோர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
மாற்றத்தின் ஒரு பகுதியாக பயிற்சியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ள நிலையில் புதிய பயிற்சியாளர்களை நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.