ஐந்து தலைமுறைகளாக வசிக்கும் மக்கள் : வக்பு சொத்து என வந்த நோட்டீஸால் அதிர்ச்சி!
Jul 25, 2025, 04:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐந்து தலைமுறைகளாக வசிக்கும் மக்கள் : வக்பு சொத்து என வந்த நோட்டீஸால் அதிர்ச்சி!

Web Desk by Web Desk
Apr 19, 2025, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த காட்டுக்கொல்லை கிராமத்தில் ஐந்து தலைமுறைக்கும் மேலாக 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் அந்த கிராமம் வக்பு வாரியத்திற்குச் சொந்தம் எனக் கூறி நோட்டீஸ் வந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் உள்ள 6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு கிராமம் தான் காட்டுக்கொல்லை. இந்த கிராமத்தில் சுமார் 5 தலைமுறைக்கும் மேலாக 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி வசித்தும், விவசாய செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம்  27ஆம் தேதி அன்று சையத் அலி சுல்தான் ஷா என்பவரின் பெயரில் கிராம மக்களுக்கு நோட்டீஸ் வந்துள்ளது. அதில் நீங்கள் வசிக்கும் நிலமானது வக்பு வாரியத்துக்குச் சொந்தமானது என்றும், நிலத்தினை புதுப்பிக்க வேண்டும் என்றால் நிர்ணயிக்கப்பட்ட தொகையை வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உடனடியாக புதுப்பிக்கவில்லை எனில் நிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸை கண்டு அதிர்ச்சியடைந்த காட்டுக்கொல்லை கிராம மக்களுக்கு இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த மகேஷ் என்பவர் உதவ முன்வந்துள்ளார். இதையடுத்து மகேஷின் தலைமையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்ற மக்கள், நிலத்தில் தாங்கள் வசிப்பதற்கு அனுமதி அளித்த ஆவணங்களை ஒப்படைத்து தங்களுக்கு நீதி வேண்டும் எனக் கேட்டுள்ளனர். அப்போது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியதாகக் கிராம மக்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்த நிலத்தைப் பல வருடங்களுக்கு முன்பு கூலி வேலை செய்த பணத்தைக் கொடுத்து வாங்கியதாகப்  பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். நிலத்தில் வீடு கட்ட, மின் இணைப்பு பெற என ஒவ்வொரு விஷயத்திற்கும் தனிப்பட்ட முறையில் இதற்கு முன்பு இருந்த முத்தவல்லி, பணம் பெற்றதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.

வக்பு சொத்து என்றால் எதற்குத் தனிப்பட்ட முறையில் பணம் பெற்று இடத்தை ஒப்படைக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பும் மக்கள் இதற்காக தாங்கள் தண்டனை அனுபவிக்க முடியாது என வேதனை தெரிவிக்கின்றனர்.

நிலத்தைப் பணம் கொடுத்து வாங்கி வீடு கட்டி வாழ்ந்து வருவதாகக் கூறும் காட்டுக்கொல்லை வார்டு உறுப்பினர் மணிகண்டன், வக்பு வாரியத்தின் சொத்து வரி கட்ட வில்லை எனில் வெளியேறுங்கள் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்தார். உடனடியாக தீர்வு கிடைக்கவில்லை எனில் காட்டுக்கொல்லை கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

பல ஆண்டு காலமாக வசிக்கும் தங்களைப் பாதுகாக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே காட்டுக்கொல்லை கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags: People living there for five generations: Shocked by the notice that it is a Waqf property!வேலூர் மாவட்டம்அணைக்கட்டுகாட்டுக்கொல்லை
ShareTweetSendShare
Previous Post

ஆர்பாட்ட மேடையை அகற்ற முயன்ற காவல்துறை – அதிமுகவினர் சாலைமறியல்!

Next Post

4 வழிச்சாலையாக மாறும் திண்டிவனம் – கிருஷ்ணகிரி சாலை : அன்புமணி ராமதாஸ் தகவல்!

Related News

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

தாய்லாந்து – கம்போடியா இடையே ஏற்பட்ட மோதல் -11 பேர் கொல்லப்பட்டனர்!

திருவள்ளூர் : பண மோசடி புகாரளித்த சின்னத்திரை நடிகை – போலீசார் விசாரணை!

குளச்சல் அருகே சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு!

சக்தி திருமகன் படம் – மாறுதோ பாடல் வெளியானது!

நடப்பனஹள்ளி கருப்பசாமி கோயிலில், மிளகாய் யாகமும், பூசாரிக்கு மிளகாய் தூள் கரைசலால் அபிஷேகம்!

கள்ளக்குறிச்சி போலீசார் கண்முன்னே கடுமையாக தாக்கிக் கொண்ட பாமக, தவெகவினர்!

இந்திய ரயில்வேயில் ஒரு நிமிடத்தில் 1,50,000 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் வசதி : சர்வர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies