வக்ஃபு வாரிய திருத்த சட்டத்தை கொண்டு வந்த பிரதமர் மோடிக்கு, இஸ்லாமிய பிரதிநிதிகள் நேரில் நன்றி தெரிவித்தனர்.
தாவூதி போரா பிரிவு இஸ்லாமியர்கள் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். அப்போது மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
வக்ஃப் வாரியத்தில் சீர்த்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்பது தங்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்ததாக குறிப்பிட்ட தாவூதி போரா பிரிவு இஸ்லாமியர்கள், அதனை நிறைவேற்றிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.