நேஷனல் ஹெரால்டு மற்றும் யங் இந்தியன் ஆகியவை காங்கிரஸுக்கு ஏடிஎம் ஆகிவிட்டதாக பாஜக எம்பி அனுராக் தாக்கூர் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து சண்டிகரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்பி அனுராக் தாக்கூர், இமாச்சலப் பிரதேச அரசு, பணம், அகவிலைப்படி உள்ளிட்டவற்றை அரசு அதிகாரிகளுக்கு வழங்கவில்லை என்றும், ஆனால் நேஷனல் ஹெரால்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
இமாச்சலப் பிரதேச மக்களின் பணம் ஏன் நேஷனல் ஹெரால்டுக்கு வழங்கப்பட்டது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.