அடுத்த 3 ஆண்டுகளில் ஜெர்மனி மற்றும் ஜப்பானை விட இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், உலகின் கல்வி மையமாக மாறும் வலிமை இந்தியாவிடம் உள்ளது என தெரிவித்தார்.
ஜெர்மனி மற்றும் ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் 2வது பெரிய பொருளாதாரமாக இந்தியா முன்னேறும் எனக்கூறிய அவர், அடுத்த 3 ஆண்டுகளில் இந்த முன்னேற்றம் நிகழும் என தெரிவித்தார்.