ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் கோலாகலமாக தொடங்கியது.
புகழ்பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேர்த்திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டிற்கான சித்திரை தேர்விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை முன்னிட்டு அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளிய சுவாமி மேளதாளத்துடன் கொடியேற்ற மண்டபத்திற்கு வந்தடைந்தார்.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்திற்கு தீபாரதனைகள் காட்டப்பட்டு திருக்கொடி ஏற்றப்பட்டது.