பெங்களூருவைச் சேர்ந்த பிரபல நாய் வளர்ப்பாளர் சதீஷ் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள உலகின் மிக விலை உயர்ந்த நாயை சதீஷ் வாங்கியதாகத் தகவல் வெளியானது.
இதையடுத்து சமூக வலைத்தளங்களில் பிரபலமான அவரது இல்லத்தில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
ப்போது 50 கோடி ரூபாய்க்கு நாய் வாங்கியதாக அவர் பொய் கூறியிருப்பது தெரியவந்துள்ளது. தவறான தகவலைப் பரப்பிய அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.