அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் ChatGPT குறித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த நட்டாலியா என்ற பெண் தனது உடலில் உணர்ந்த சிறிய அசௌகரியம் குறித்து ChatGPT-யிடம் கேட்டுள்ளார்.
அதற்குப் பதிலளித்த ChatGPT, உடனடியாக அவரை மருத்துவமனை செல்ல அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து மருத்துவமனை சென்ற நட்டாலியா, தான் 8 மாதம் கர்ப்பிணியாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் அவருக்கு நல்ல முறையில் பிரசவம் நடைபெற்ற நிலையில், ChatGPT -க்கு நன்றி தெரிவித்து தனது இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.