மீண்டும் பணியாளர்களை பணிநீக்கம் செய்யக் கூகுள் தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், இந்தியாவில் விளம்பரம், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவுகளில் உள்ள ஊழியர்கள் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கும், செலவுகளைக் குறைப்பதற்கும் கூகுள் மேற்கொண்டுள்ள தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த பணிநீக்கங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ராய்டு, பிக்சல் ஸ்மார்ட்போன்கள், குரோம் பிரவுசர் ஆகிய பிரிவுகளில் நூற்றுக்கணக்கான ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கும் சமீபத்திய முடிவைத் தொடர்ந்து அடுத்த பணிநீக்க நடவடிக்கை நடைபெற்று வருகிறது.