நடிகர் ரஜினி காந்தின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
கார்த்திக் சுப்பராஜ் ரஜினிக்குக் கதை சொல்லி உள்ளதாகவும், அது ரஜினிக்குப் பிடித்துவிட்டதாகவும் விரைவில் படத்திற்கான வேலை தொடங்கும் என்ற தகவல் கிடைத்துள்ளது.
ரஜினிகாந்த் ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2019-ம் ஆண்டில் ‘பேட்ட’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ரஜினியுடன் கார்த்திக் சுப்பராஜ் கைகோர்க்கும் இந்த புதிய படம் பேட்ட 2 வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.