தமிழ்நாடு முழுவதும் இருந்து, தனது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் 4 ஆயிரம் பேரைச் சந்தித்து, நடிகர் சூர்யா புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான சூர்யா, ஆண்டிற்கு ஒருமுறை தனது ரசிகர்களை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டு போரூரில் உள்ள தனியார் மண்டபத்திற்குத் தனது ரசிகர்களை நேரில் வரவழைத்து நடிகர் சூர்யா புகைப்படம் எடுத்துக் கொண்டார்.