ஸ்பெயினில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
காஸ்டெல்லோனில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று உள்ளது. அங்குள்ள ஒன்பதாவது மாடியில் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென தீப்பற்றி மளமளவென எரிந்தது.
கரும்புகை சூழ்ந்ததால் மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனையறிந்து அங்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.