மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் படகு தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது.
மடான் குமு துறைமுக பகுதியில் இருந்து போலோம்பா பகுதிக்கு ஒரு மோட்டார் படகு புறப்பட்டது.
அந்தப் படகில் சுமார் 400 பேர் பயணம் செய்தனர். பன்டாக்கா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென படகில் தீ விபத்து ஏற்பட்டது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் உயிர் தப்பிப்பதற்காகப் படகில் இருந்து அடுத்தடுத்து ஆற்றில் குதித்து உள்ளனர்.
50 பேர் உயிரிழந்த நிலையில், 100 பேர் மீட்கப்பட்டனர். மாயமானவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.