கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள தர்மராஜா கோயிலில் பல்லக்கு உற்சவம் வாணவேடிக்கைகளுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கொத்தப்பள்ளி பகுதியில் கடந்த 7ஆம் தேதி கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தேரோட்டம் சிறப்பாக நடந்த நிலையில், சிகர நிகழ்ச்சியான பல்லக்கு உற்சவம் வாணவேடிக்கையுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோயில் பூஜாரி பிரம்மாண்ட பூக்கரகம் எடுத்து நடனம் ஆடியவாறு அருளாசி வழங்கிய நிலையில், கத்தி போடும் நிகழ்ச்சியில் இளைஞர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்தை ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்வில் 27 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.