உலக பாரம்பரிய தினத்தையொட்டி மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை இன்று சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி கண்டு ரசிக்கலாம் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள பல்லவ மன்னர்களின் கலைச் சிற்பங்கள் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. புராதன சின்னங்களை கண்டு ரசிப்பதற்காக இந்தியர்களுக்கு 40 ரூபாயும், வெளிநாட்டவர்களுக்கு 600 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு இன்று ஒருநாள் மட்டும் எவ்வித நுழைவு கட்டணமின்றி சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கலாம் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.