கெலவரப்பள்ளி அணையில் இருந்து பாசனத்திற்காக தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் நீரில் அதிகப்படியான நுரைப்பொங்கியபடி உள்ளது.
தென்பெண்ணை ஆற்றங்கரையோரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுநீர், மழை காலங்களில் ஆற்றில் கலக்கவிடப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனால், பாசனத்திற்காக தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படும் நீர் நுரைப்பொங்கி காட்சியளிப்பதுடன், துர்நாற்றம் வீசியும் வருகிறது.
எனவே, நீரை சுத்திகரிக்க கொடியாலம் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.