அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் நடந்த முறைகேட்டைத் தட்டிக்கேட்டதால் தூய்மை பணியாளர்களை வைத்து மருந்தக அதிகாரி தன்னை தாக்கியதாக லேப் டெக்னீசியன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் ராஜு என்பவர் லேப் டெக்னீசியனாக பணிக்குச் சேர்ந்துள்ளார்.
அவர் பணியில் இருந்தபோது எக்ஸ்ரே அறையில் எந்தவித கல்வித் தகுதியும் இல்லாத 10ஆம் வகுப்பு மட்டுமே பயின்ற பெண் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார்.
இது குறித்து மருந்தக அதிகாரியான இளங்கோ என்பவரிடம் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், எக்ஸ்ரே எடுக்க வரும் நோயாளிகளிடம் கட்டாய பண வசூலில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை ராஜு கண்டித்ததாகத் தெரிகிறது.
இதனால், ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகத் தூய்மை பணியாளர்களைக் கொண்டு ராஜுவை, மருந்தக அதிகாரி இளங்கோ தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஜு புகார் மனு அளித்துள்ளார்.