சென்னை விமான நிலையத்திற்கு உள்ளே அரசு பேருந்துகள் விரைவில் அனுமதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை விமான நிலைய வழித்தடத்தில் இயங்கும் அரசு பேருந்துகள், ஜிஎஸ்டி சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றன. இதனால் பயணிகள் அதிக சுமைகளுடன் விமான நிலையத்திற்குள் நீண்ட தூரம் நடக்க வேண்டிய சூழல் உள்ளது.
இந்த நிலையில், விமான நிலையத்திற்குள் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ள மாநகர போக்குவரத்து கழகம், இதற்கான கோரிக்கையை விமான அமைச்சகத்திடம் முன்வைத்துள்ளது. இதற்கான அனுமதி கிடைத்தவுடன் அரசுப் பேருந்துகள் விரைவில் விமான நிலைய வளாகத்திற்குள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.