கோவில்பட்டி அருகே ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் டேப்புகளை திருடிய நபரைப் பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
வடக்கு திட்டங்குளம் கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளின் முன்பு குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழாய்களில் உள்ள டேப்-களை மர்மநபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார்.
அவரை அப்பகுதி மக்கள் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிரமாகத் தேடி வந்தனர். அந்த நபர் மீண்டும் திருட்டில் ஈடுபட்ட போது அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர் கட்டட தொழிலாளி என்பதும், பீடி வாங்குவதற்காக டேப்களை திருடி எடைக்குப் போட்டதும் தெரியவந்தது.